அன்றும் இன்றும்: பொறுப்பும் துறப்பும்


ஐம்பது, அறுபதுகளில் தொடக்கப் பள்ளி மாணவனாகப் பயின்ற காலம் தொட்டுப் பின்னர் ஆசிரியராக உருமாறி, பல நிலைகளில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் ஐம்பதாண்டுக் காலம் பணியாற்றிப் பல நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டிருப்பதில் சுகமும் சோகமும் பரவிக் கிடக்கிறது.
அறுபதுகள் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம் என்பார்கள். காமராசர் என்ற மாமனிதரைத் தவிர அவருக்குத் துணையாக நின்ற மற்றொரு மனிதரும் வரலாற்றில் நிலைப்பெற்றிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் என்ற பதவி இல்லை. மாறாகப் பொதுக்கல்வி இயக்குநர் என்ற பதவிதான். பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என்று அனைத்துத் துறைகளையும் வழிநடத்தியவர் என்.டி.எஸ். என்ற
