பொதுத்தேர்வு ரத்து: பிழையான முடிவு


பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2025–26 கல்வியாண்டிலிருந்து ரத்து செய்யப்படுவதாக மாநிலக் கல்விக் கொள்கை வெளியீட்டு நிகழ்வின்போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசின் இம்முடிவுக்கு பலதரப்பட்ட எதிர்வினைகள் எழுந்தாலும் வெகுஜன ஊடகங்கள் தூக்கலாக ஆதரவு காட்டின. இம்முடிவால் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்திருப்பதான தோற்றத்தை அவை உருவாக்கின. பிரச்சினையின் வேர்களையும் பின்விளைவுகளையும் அறியாதவர்கள் அல்லது அதுபற்றிக் கவலைப்படாதவர்கள் மகிழ்ச்சியடையக்கூடும். கல்வி மீதும் சமூகத்தின் மீதும் கரிசனை கொண்டோருக்கு அரசின் அறிவிப்பு உறுத்தலைத் தருவதாக உள்ளது. ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறு
