கற்றல் சூழல்: கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவோமா-?


ஓர் வகுப்பறை. குழந்தைகள் அங்கங்கே இறைந்து அமர்ந்திருக்கிறார்கள். சின்னச்சின்னதான சிரிப்புத் தளும்பல்கள். இருபத்தைந்து மாணவர்களை உள்ளடக்கிய ஐந்தாம் வகுப்பென்று வைத்துக்கொள்வோம். ஆசிரியர் வேறு ஏதோ பணியில் ஆழ்ந்திருக்க, சில குழந்தைகள் எழுதிக்கொண்டும், சிலர் படித்துக்கொண்டும் சிலர் உரையாட, மூலையில் இரு குழந்தைகள் உறங்குகிறார்கள். அடுத்த வகுப்பிலிருந்து ‘ஓரோன் ஒண்ணு’ என்று ஆசிரியர் சொல்ல, பின்னாலேயே மாணவர்கள் சேர்ந்திசைக்கும் குரல் கேட்கிறது. அடுத்த வகுப்பறையில் ஆசிரியர் இல்லை. மாணவர்கள் சிலர் விளையாடியபடி இருக்க, சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இருவர் முடியைப் பிடித்துச் சண்டையிடுகிறார்கள். விளையாட்டு மைதானத
