பாரதியும் சுதேசி கிருஷ்ணனும்
பாரதியும் சுதேசி கிருஷ்ணனும்
சிங்கப்பூர் சுயமரியாதை இயக்க இதழில் வெளியான பாரதி வரலாறு
அவரது வாழ்நாளிலே, சிறப்பாக நேர்ந்த நிகழ்ச்சிகளை, அவர் வாயினின்றும் கேட்பது மிகவும் அருமை. பாரதியாரைப் பற்றி ஆங்காங்கே கிடைக்கும் ‘துக்கடாக்களை’ நண்பர்கள் பலர் சேர்ந்து, திரட்டினாலொழிய, அவரது வாழ்க்கை வரலாற்றைத் தனி ஒருவன் பூர்த்திசெய்ய முடியாது
- வ. ரா., மகாகவி பாரதியார் (சென்னை: சக்தி காரியாலயம், 1944), ப.8.
பாரதி மறையும்வரை, வெகு சிலரே அவரது ஆளுமையின் சிறப்பையும், எழுத்தாற்றலின் முக்கியத்துவத்தையும் உணர்ந்திருந்தார்கள். அன்றைய தமிழுலகம் அவரைச் சரியாக மதிப்பிட்டு,
