கற்றல் செயல்பாடு: பூப்பறிக்கக் கோடரியா?


ஒரு வகுப்பறையில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே அளவு கொண்ட உடை சரியாக இருக்குமா? பெரும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஒரே உடை பொருந்தி விடக்கூடும். அத்தனை மாணவர்களுக்கும் ஒரே அளவு உணவு போதுமானதாக இருக்குமா? 95% ஒரே அளவு போதுமானதாகவே இருக்கும்.
அதே நேரம் அத்தனை பேரின் கற்றல் திறனும் ஒரே அளவில் இருக்க வாய்ப்பிருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான கற்றல் வழிமுறைகள் உண்டு. அதுபோலவே ஒவ்வொருவருக்குமான கற்றல் குறைபாடுகளும் வெவ்வேறு வகையில், வெவ்வேறு அளவுகளுடன் இருக்கக்கூடும்.
கற்றல் குறைபாடு என்று சொன்னாலும் அதற்குள் டிஸ்கால்குலியா, டிஸ்கிராஃபியா, டிஸ்லெக்ஸியா போன
