இலக்கியத் தற்கொலை
இந்து தீவிரவாதத்திலிருந்து தப்பித்து இந்தத் தமிழ் எழுத்தாளர் பெரும் புயலைக் கடந்துவந்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டில், அவரது ‘மாதொருபாகன்’ என்ற நாவலால் ஆத்திரமடைந்த இந்து தேசியவாதிகளால் அவர் குறிவைக்கப்பட்டு, “இலக்கியத் தற்கொலை” செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்திய நீதி அமைப்பால் அவர் “உயிர்த்தெழுப்பப்பட்டார்”.
லு மொண்ட் தே லிவ்ர் அவரைச் சந்தித்தது.
2015 ஜனவரி தொடக்கத்தில் ஒரு நாள், இந்தியத் தமிழ் எழுத்தாளர் பெருமாள்முருகன், இலக்கிய வரலாற்றில் அதுவரை எந்த எழுத்தாளருக்கும் நடந்திராத நிகழ்வினால் தனது இலக்கியத் தற்கொலையை ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவின் மூலம் அறிவித்தார்: எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான் அவன் கடவுளல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி வெறும் ஆசிரியனாகிய பெ. முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்” என்று அறிவித்தார்.
இந்தத் துயரகரமான நிகழ்வு எழுத்தாளரை மிகவும் பாதித்தது, அவருடன் இருந்தவர்களின் கூற்றுப்படி, அவரை “உடைத
