அலைகளை வீடுவரை அழைத்து வருபவன்

சிற்பம்: நிரஞ்சன் பிரதாபன்
அலைகளை வீடுவரை அழைத்து வருபவன்
அலைகளை வேண்டுமென்றே வீடு வரை அழைத்து வருகிறான்
அவனிடம் எத்தனை முறை சொன்னாலும்
அதனை ஏற்றுக்கொள்ளாமல்
திரும்பத் திரும்பக் கொண்டுவருகிறான்
கையில் ஒளிந்திருக்கும் சிற்றொளி
அதனைக் கண்டு நடுங்குகிறது
தூர நிற்கும் நட்சத்திரங்களுக்குள்ளும் திடீர் சறுக்கல்
நான் எதைப் பற்றி யாரிடம் சொல்வது
அலைகளில் கண்டெடுத்த முத்துக்களும் மணிகளும்
என்னைப் பார்க்கின்றன
நான் அதற்குப் புன்முறுவல் மட்டுமே காட்டுகிறேன்
பதிலுக்கு அதுவும் எனக்கு ஒரு புன்முறுவல்
அதில் ஓர் திருப்தி
அதில் ஓர் பேரமைதி.
