கேரளம் தன்வயப்படும் மதங்களும் அரசியலும்
சமீபத்தில் நடைபெற்ற கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கேரளம் போன்ற மத நல்லிணக்க மாநிலத்தின் சமூக இருப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றன. திருவனந்தபுரம் மாநகராட்சியில் பிஜேபியின் வெற்றியும் பிற பகுதிகளில் அது அடைந்த கணிசமான வெற்றியும் வெறுமனே பாரதிய ஜனதா போன்ற மதவாத சக்திகளின் வெற்றி மட்டுமல்ல; அது ஏற்கெனவே அங்கு கூர்மைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்து - முஸ்லிம் மதத் துருவமாக்கலின் விளைவும் எனலாம். இது பன்மயப்பட்ட இந்து - முஸ்லிம் சமூகத்தின் இருப்பிற்குச் சிக்கலை ஏற்படுத்தும் ஒன்றுமாகும்.
கேரளத்தில் நிகழும் மதத் துருவமாக்கலை இந்தியச் சுதந்திரத்தின்போது நடந்த மாபெரும் பிரிவினையின் வரலாற்றுத் தொடர்ச்சியோடு அணுக வேண்டியிருக்கிறது. அன்றைய ஒன்றுபட்ட இந்தியாவில் சுமார் 10 கோடி முஸ்லிம்கள் புதிய நாட்டிற்குப் பிரிந்துசென்ற வரலாற்றுத் துயர் இன்னும் தீர்ந்துவிடவில்லை. அன்றைய இந்தியாவின் மொத்த முஸ்லிம் மக்கள் தொகை சுமார் 20 கோடி. அதில் சரிபாதியினர் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த பின்னர் மீதமிருந்த இந்திய முஸ்லிம்களின் உளவியல் தன்வயப்பட்ட உளவியலாகப் பிந்தைய கட்டத்தில் மாறியது. 1925
