அரசு உதவிபெறும் பள்ளிகள்: தரையில் நடக்கும் தண்ணீரில் நீந்தும்


ஆறாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புவரை, நான் கணியூர் அக்கிரகாரத்தின் கிழக்கு முனையில் இருந்த ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பள்ளியாக உருவெடுக்கும் முன்னால் அந்தக் கட்டடம் சத்திரமாக இருந்தது. எங்கள் பகுதியில் கணியூரை விட்டால் மடத்துக்குளத்தில்தான் உயர்நிலைப் பள்ளி. நான் வளர்ந்த கடத்தூரிலிருந்து மடத்துக்குளம் ஐந்து கிலோமீட்டர். கணியூருக்கு ஒரு கிலோமீட்டர்தான். நடுவில் அமராவதி ஆறு. பாலம் கிடையாது. எனவே பேருந்து வசதி கிடையாது. ஆனாலும் அமராவதியின் அக்கரைக் கிராமங்களுக்கு உயர்நிலைப் பள்ளி என்றால் கணியூர்தான்.
கடத்தூரில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி உண்டு. எங்கள் ஊர்க் குழந்தைகள் ப
