செம்புலப் பெயல்நீர் ஆனோம்

இது ஆய்வுக் கட்டுரையல்ல; ஆய்வுக்கான தேவைக்குரிய கட்டுரை.
சாதியத்தின் தாக்கத்திலிருந்து வெளியேறி வருவது அவ்வளவு சுலபமான வழியாக இருக்க முடியுமா? சாதிய உணர்வுகளைப் புறக்கணிப்பது நம்முடைய மனத் தேர்வாக இருக்கவும் கூடுமா? மதத்தைப் பின்னிறுத்திச் சாதியம் முன்னிலையில் இருக்கின்ற இந்நாட்களில் இதைக் கற்பனை செய்வது சுவாரசியமான கணக்குபோல இருக்கிறது.
ஆனால் கற்பனைக்கும் எட்டாத முறையில் அப்படியான ஒரு மகத்துவம் தென் மாவட்டத்து முஸ்லிம்களிடையே நடந்துகொண்டிருக்கிறது.
என்னுடைய பள்ளிப் பருவத்தில் சாதியத்தனமான குறிப்பிடல்கள் எங்கள் சமூகத்து மக்களிடையே இருந்தன. அந்தச் சாதியப் பிரிவைத் தொழில்ரீதியான பிரிவுதான் என்று எம் சகோதரர்கள் கூறுகிறார்கள். நம்மிடையே தொழில்களைக் காரணங்களாக வைத்துதான் அப்படி அழைத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள் அவர்கள். ஒருவகையில் இந்து மதத்திலுள்ள சாதியப் பிரிவுகளை ஏற
