ஆலயத்தின் காவிரி

சிற்பம்: நிரஞ்சன் பிரதாபன்
ஆலயத்தின் காவிரி
கும்பகோணத்திலிருந்து தில்லி வந்தபோது எனக்குப் பதினெட்டு இருக்கும். அடுத்த பதினெட்டு வருடங்களில் அதிகபட்சம் ஏழு எட்டு முறைதான் ஊருக்குச் சென்றிருப்பேன். கணவன், குழந்தைகள் என அத்தனையையும் மறந்து இருந்துவிட்டேன். சரியாகப் பத்தொன்பதாவது வருடம் அதாவது, எனது முப்பத்தியேழாவது வயதில் அம்மா இறந்தபோதுதான் கும்பக்கோணத்திற்கு சென்ற கடைசிப் பயணம். அப்போதே அம்மாவினதை எடுத்து வந்திருக்க வேண்டும். வீடு விற்க முடிவானால்தான் எடுப்பேனென்கிற பிடிவாதம் எனக்கு. காலமும் அது பங்குக்கு வீம்பாகப் பத்து வருடங்களை எடுத்துக்கொண்டது. காரணம் அம்மாவின் சாவு அப்படி. ஒருகட்டத்தில் விதி ஆடி முடித்து அட
