23 ஆண்டுக் காத்திருப்பு
அன்றைய பொழுது அவ்வாறுதான் நிறைவுபெறும் என்று வாமன் நிம்பல்கர் எண்ணவில்லை. அந்த ஆண்டு 1987. அது அக்டோபர் மாதமாகக்கூட இருந்திருக்கலாம். அந்த மாதத்தில்தான் அம்பேத்கர் ‘பேச்சும் எழுத்தும்’ தொகுதி 3 வெளியிடப்பட்டிருந்தது, அதையொட்டியே அக்கூட்டம் நடைபெற்றது. மகாராஷ்டிரத்தின் மாநிலச் செயலகம் முன்பு ‘சச்சிவாலயா’ என்று அறியப்பட்டது. தற்போது ‘மந்த்ராலயா’ என்று அழைக்கப்படுகிறது. அதைப்போன்று அம்பேத்கர் நூல் வெளியீட்டுக் குழுவிலிருந்து சிலர் நீக்கப்பட்டிருந்தார்கள், புதியவர்கள் சேர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்களுள் வாமன் நிம்பல்கரும் ஒருவர்.
மாநிலச் செயலக அறைக்கதவு திறக்கப்பட்டது. வாமன் நிம்பல்கர் ஆசுவாசத்துடன் வெளியேறினார். சந்தாபாய் டாணி அவரைப் பின்தொடர்ந்தார். சந்தாபாய் ஒரு எட்டை வேகமாக முன்வைத்து “வாமன்ராவ் உங்களது வேலைகளை நான் கவனித்துவருகிறேன். நீங்கள் திறந்த மனதுடையவர். தெளிவான சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர். உங்களிடம் பெரும் பணி ஒன்றை ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று படபடவென பேசினார். வாமன்ராவ் சற்று அதிர்ந்துபோனார். சா
