ஜப்பான்: சுயகல்வியை நோக்கி...


இயல்பிலேயே அழகானதும் நான்கு பருவங்களைக் கொண்டதுமான ஜப்பான், தூய்மையாகப் பராமரிக்கப்படும் நாடு. பொதுவெளியில் எழுதப்படாத விதிகளும் அதனால் அமையும் ஒழுங்கும் உண்டு. தொழில்நுட்பத்திலும் உலகின் வேறெந்த நாட்டை விடவும் தனித்துவமான முன்னேற்றம் கண்ட நாடு. இதற்கும் ஜப்பானியக் கல்வி முறைக்கும் தொடர்பு இருக்கலாம். உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள, பன்மைத்துவம் மிக்க ஒரு நாட்டை, பிறப்பு விகிதம் குறைகிற, ஒற்றைக் கலாச்சாரம் கொண்ட நாட்டுடன் ஒப்பிடுவது அபத்தமாகத் தோன்றினாலும் கல்விச் சூழலை மையப்படுத்திச் சிலவற்றைப் பார்க்கலாம்; மாற்றங்களைச் சிந்திக்கலாம்.
குழந்தை வளர்ப்பு ஒரு சமூகப் பொறுப்பு
ஜப்பான் 1899இலிருந்து குழந்தை பிறப்ப
