கற்றலின் அழுத்தம்: தொலைந்துபோகும் குழந்தைமை


குழந்தைகள் இயல்பாகவே ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் பலவிதமான கேள்விகளுடனும் கற்பனைகளுடனும் உலகை அணுகுகிறார்கள். தம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலிலும் புதுமையைக் காண்கிறார்கள். இலை விழுவதும் பட்டாம்பூச்சி பறப்பதும் அவர்களின் கற்பனைக் கதவைத் திறக்கும். வெயிலின் உக்கிரத்தில் மணல் செதுக்கி விளையாடுவதும், விழும் மழைத்துளிகளைக் கைகள் கொண்டு தெறித்து விளையாடுவதிலும் ஆர்வம் காட்டும் அவர்கள், கற்பனையால் நிஜத்தைத் தாண்டி விரியும் தனி உலகை உருவாக்கிக்கொள்கிறார்கள். குட்டி நாயைக் கண்டதும் மலரும் முகம், அதைத் தழுவும்போது உணரும் மகிழ்ச்சி உலகையே புதிதாகக் கண்டுபிடிப்பது போன்றது. புல்வெளியில் ஒரு புழுவைக் கண்டால்கூட அதைப் பற்ற
