கமலா சுரய்யாவின் கடைசி துஆ

ஓவியம்: பி.ஆர். ராஜன்
கமலா சுரய்யாவின் கடைசி துஆ
அருளாளனே
நீ பேசிய மொழி எனக்குப் புரியவே இல்லை
அதற்குக்
கோடிக்காலச் சூரியன்கள் வாட்டியெடுத்த
மணலின் கந்தகச் சுவை
அது எனக்கு அந்நியம்
என் நாவறிந்ததெல்லாம் துளசியின் எரி துவர்ப்பு
எனவே உன்னிடம் பேச என்னால் முடிவதே இல்லை.
நீ பெருகவிட்ட கடலில் என்னால் நீந்த முடியவில்லை.
அதில்
அலைமேல் அலைமேல் அலையலைகள்
மூழ்கிப் பார்த்தும்
என் கையையே காணவியலாத இருள்
அது எனக்கு அஞ்ஞானம்
என் விழியறிந்ததெல்லாம் நில விளக்கின் தூங்காச் சுடர்
எனவே உன்னைப் பார
