அரசுப் பள்ளி: மகிழ்ச்சியான கற்றலுக்கு வழி


பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பல்வேறு கல்வி வாரியங்கள் (Multi board concept) இயங்கிவருகின்றன. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், மலைப்பகுதியில் வாழும் மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆகியவை மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன.
பாடத்திட்டத்தின் கீழ் வேறுபட்ட பிரிவுகளையுடைய பள்ளிகளான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), மாநில அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஐசிஎஸ்இ எனப்படும் இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் பள்ளிகள், சர்வதேசப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள், சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாண்டிச
