‘‘உண்மைய சொல்லுங்க சார்”
பதினொரு ஆண்டுகளில் பதினொரு ஓட்டல்களில் வேலை செய்திருக்கிறேன். அதில் கடைசியாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் 2001முதல் 2006வரை ஐந்து ஆண்டுகள் பணிசெய்தேன். இந்தப் பணியில் எனது இயல்பு இணங்கிப்போக முடியாததால் மாற்றத்தைத் தேடினேன். காலச்சுவடில் 2007இலிருந்து தொடர்பில் இருந்தாலும், 2011இல் நேரடிப் பணியாளனாக இணைந்தேன். அதற்கு ‘நெய்தல்’ கிருஷ்ணன் ஒரு காரணமாக இருந்தார். உதவி என்று வந்தால் ஏதோ ஒரு வகையில் உதவுகிற மனநிலை கண்ணனுக்கு எங்கே இருந்து வருகிறது என்று எனக்குத் தெரியாது. அகதியான என்னை நம்பி எப்படி வேலையில் சேர்த்தார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.
தமிழின் முக்கியமான எழுத்தாளரான சுந்தர ராமசாமி ஆரம்பித்த பத்திரிகை, அவரை மையமாகக் கொண்ட பதிப்பகம், ஒரு ஆர்வத்திற்காகத்தான் கண்ணன் இந்த வேலையைச் செய்கிறார். இதில் இவர்களுக்கு எப்படி லாபம் வர முடியும் என்று ஆரம்பத்தில் நினைத்தேன். காலச்சுவடு அந்தக் காலகட்டத்தில்தான் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாகப் பதிவாகியிருந்தது. புத்தகச் சந்தைகளும் வளர்ச்சி நிலையில் இருந்தன. சென்னை, மதுரை, ஈரோடு, நெய்வேலி, திருப்பூர் புத்தகக் கண
