கல்வித்தரம்: ஆசிரியர்களின் பொறுப்பு


மு. இராமனாதன்
விக்டோரியா பூங்கா காஸ்வே பேவிவில் இருக்கிறது. காஸ்வே பே ஹாங்காங்கின் நடு நாயகமான பகுதி. சுமார் 50 ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கும் இந்தப் பூங்காவிற்குள் நான்கு கால்பந்தாட்ட மைதானங்கள் உள்ளன. ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி இங்குதான் நடக்கும். இங்கிருந்துதான் பேரணிகள் புறப்படும். 2014இல் நடந்த ஜனநாயகத்திற்கான போராட்டம், ஒருநாள் பேரணியோடு முடியவில்லை. அது சில மாதங்கள் நீண்டது. எல்லா நாட்களிலும் வேலை நேரம் முடிந்ததும், மாலை வேளையில் ஆர்வலர்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி எதிர்ப்பைத் தெரிவிக்கலானார்கள். விக்டோரியா பூங்கா முக்கியமான கூடுகைத் தலமாக இருந்தது. போராட்டக்காரர்களில் பள்ளி ஆசிரியர்களும் இருந்தார்கள். அவர்கள் தங்
