சாதியச் சொல்லாடல்களின் சமகால மாற்றங்கள்

Courtesy: HT
கடந்த அக்டோபர் மாதத்தில், முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு முன், அம்பேத்கரையும் முத்துராமலிங்க தேவரையும் இணைத்து அச்சிடப்பட்ட விளம்பரத் தட்டி ஒன்று மதுரையில் வைக்கப்பட்டிருந்தது. முரண்பட்ட சமூகங்களின் அடையாளங்களாகிவிட்டவர்களின் படங்களை ஒன்றிணைப்பதால் ஏற்படக்கூடும் பதற்றத்தைக் கருதிக் காவல்துறை அந்த விளம்பரத் தட்டியை ஓரிரு நாட்களில் அகற்றியது. ஆனால் அடுத்த இரண்டொரு நாட்களில் வந்த தேவர் ஜெயந்தியின்போது மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்தியை வாழ்த்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் சுவரொட்டிகள் ஆங்காங்கு தென்பட்டன. ஏற்கெனவே அரசல்புரசலாக இருந்த இப்போக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துவருகிறது. இதற்குச் சில நாட்களுக்கு முன்பு நடந்த மற்றொரு சம்பவத்தையும் இணைத்துப்பார்க்க வேண்டியுள்ளது.
2025 அக்டோ
