இலக்கியம் ஒரு சுயமரியாதை
கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் புகுமுக வகுப்புத் தேர்வை எழுதிய மாணவரொருவர் முடிவுக்காகக் காத்திருந்தார். அந்த வட்டாரத்திலேயே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுக் கல்லூரிக்குச் சென்ற முதல் மாணவர் அவர். அவருடைய அம்மா, அப்பா, உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அனைவருமே அவருடைய தேர்வு முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அந்த மாணவர் மட்டும் தன் முடிவைப் பற்றிய பதற்றமோ கவலையோ இல்லாமல், தொடர்ச்சியாகக் கிடைத்த விடுப்பை மனத்துக்குப் பிடித்த விதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புத்தகமே உலகமென வாசிப்பின்பத்தில் மூழ்கியிருந்தார்.
தேர்வு முடிவுநாள் வந்தது. காலையில் வந்துசேர்ந்த செய்தித்தாளை அனைவரும் ஆவலோடு பிரித்து அவருடைய எண்ணைத் தேடினார்கள். தேர்ச்சியடைந்தவர் பட்டியலில் அவருடைய எண் இல்லை. ஆங்கிலப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவர் தோல்வியடைந்திருந்தார். அந்தத் தோல்வி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவருடைய அப்பா அந்த ஊர்