கற்களுடன் மோதிக் கல்வெட்டைக் கற்றேன்
நாகர்கோவிலில் பிறந்த சுப்பையா நடராசன் என்ற செந்தீ நடராசன் முக்கியமான கல்வெட்டாய்வாளர். ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தமிழக அரசு நல்லாசிரியர் விருது பெற்றவர்; பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கல்வெட்டுகள்மீது தற்செயலாகத் தொடங்கிய ஆர்வம் அவரைக் கல்வெட்டுகள் குறித்த ஆய்வில் ஆழமாகவும் மும்முரமாகவும் ஈடுபடவைத்தது. பணிஓய்வுக் காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாகக் கல்வெட்டு ஆய்வில் ஈடுபட்டுவரும் இவர் மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். சிற்பவியல், பிராமி, வட்டெழுத்து எனப் பழைய எழுத்து வரி வடிவங்கள் அறிந்தவர். ஓலைச் சுவடிகள், செப்பேடுகள் படிக்கும் திறன் பெற்றவர். இதுவரை ஏழு நூல்களை எழுதியுள்ளார்; நான்கு நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
80 வயதைக் கடந்துவிட்ட அவர் தற்போது நாகர்கோவிலில் வசித்துவருகிறார். இப்போதும் எங்காவது புதிய கல்வெட்டு இருப்பதாகத் தகவல் வந்தால் உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று அந்தக் கல்வெட்டைப்