கம்பனை முன்வைத்து :கேரளத் தோல்பாவைக் கூத்தில் தமிழ்ப் பனுவல்கள்
நாட்டார் கலைகள் சிலவற்றிற்கு முறைப்படுத்தப் பட்ட பனுவல் உண்டு (மெலட்டூர் பாகவத மேளா; இரண்ய நாடகம்). தென்னிந்திய தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் ராமாயணக் கதைகள் முழுவதும் வால்மீகியைப் பின்பற்றியதல்ல. ஆந்திர தோல்பாவைக்கூத்து தெலுங்கு ரங்கநாத ராமாயணக் கதையை மூலமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. கர்நாடகத் தோல்பாவைக் கூத்தில் சிக்கதேவ உடையாரின் ராமாயணம் செல்வாக்கு பெற்றுள்ளது.
கேரள பாவைக் கூத்திற்கு கம்பனின் ராமாயணம் மூலமாக உள்ளது. இது ‘ஆடல்பற்று’ என்னும் தலைப்பில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத் தோல்பாவைக் கூத்துக்கு என்று தனியான ராமாயணம் கிடையாது. பெரும்பாலும் இவர்கள் தெலுங்கு ராமாயணக் கதையையே பின்பற்றுகிறார்கள்
ஆடல், பற்று, கூத்துக்கு உரிய ஒரு மூலப்பனுவல் ஆடல் acting, dancing playing பற்று. Adaptation, Modif, Calio என்கிறார்கள். ஆடல், நடிப்பு தொடர்பானது என்று பொருள் கூறலாம். அதாவது கூத்துத் தொடர்பான பணிகள். ஆடல், பற்று ஆக