கதவைத் திறந்துவைத்த காலச்சுவடு
காலச்சுவடு நான் இளங்கலை புகுந்த ஆண்டில் (1998) அறிமுகமானது. அதுவும் நூல் வடிவில் 1992இல் வெளியான சிறப்பிதழ் மூலமே அது நிகழ்ந்தது. தீவிர இலக்கிய வாசிப்பிற்கான இதழாக அறியப்பட்ட காலச்சுவடு புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்தியதோடு அவ்வழியில் சிந்திக்கவும் வைத்தது என்பதே உண்மை. திருநெல்வேலிக்குள் கையில் காலச்சுவடு இதழைச் சுருட்டி வைத்துக்கொண்டு பேருந்துகளில் அங்குமிங்கும் பயணிக்கும்போது வாசிப்பதுண்டு. திருநெல்வேலி சந்திப்பில் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இதழ்களின் அட்டைப்படங்களில் தமிழீழ, கம்யூனிச, தலித் சார்ந்த தலைப்புகளைக் கண்டால் உடனே வாங்கிவிடுவதுண்டு. அப்படி வாசித்தவைகள்தான் நந்தன், தலித்முரசு, இந்தியா டுடே போன்ற இதழ்கள். இளம் வயதில் புதிய சிந்தனை ஒன்றைப் பெறுவதும் அதை நண்பர்களிடம் விவாதிப்பதும் வெற்றி பெற்ற காதல் கதையை நண்பர்களுக்குத் தெரிவிக்கும் மனநிலையையொத்தது. இதழ்களில் அறிமுகப்படுத்தப்பட்