பழைய சமகால முக்கியத்துவங்கள்
காலச்சுவடின் புத்தாண்டு இதழ்களில் முந்திய வருடத்தில் வெளிவந்த சில நூல்கள்பற்றித் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். இந்தத் தடவையும் அதைத்தான் செய்யப்போகிறேன். ஆனால் ஒரு வித்தியாசம்; 2023இல் வந்த புதிய புத்தகங்கள் பற்றியதல்ல இந்த எழுத்து. சென்ற ஆண்டில் நான் வாசித்த எழுத்துக்கள் எல்லாம் 19-20ஆம் நூற்றாண்டில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகள். இந்தப் பழைய கதைகளுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்கலாம். இந்தக் கதைகள் இணையதள யுகத்திற்கு முன்பே எழுதப்பட்டவை. முந்திய தலைமுறை எழுத்தாளர்களால் நவீனத்தின் கண்டுபிடிப்பான இயந்திரங்கள் மனிதர்களை எப்படி ஆட்கொள்கின்றன என்று எச்சரிக்கையாகவும் கேலியாகவும் தீர்க்கதரிசனமாகவும் சொல்லியிருப்பவை. இக்கதைகள் செயற்கை நுண்ணறிவால் கவரப்பட்ட தற்போதைய தலைமுறைக்கு ஆரோக்கியமான ஓர் அபாய அறிவிப்பு. கணினிக் காலட்