கடல் பின்வாங்கிய காலத்தில்...
என் முதுகின் பின்னால் கடலலை மோத, முகம் நெருப்பை நோக்கியபடி மொழிபெயர்க்கிறேன்: அதிகமும் கவிதைகள். இப்போ மொழி, கலாச்சாரங்கள் அனைத்துமே கடலுக்கும் புயல்களுக்கும், புகைமூட்டங்
களுக்கும் தொற்றுநோய்களுக்கும் நெருப்புக்கும் இரையாகும் கட்டத்துக்கு வந்துவிட்டன. இன்னும் உயிரோடிருக்கும் ஒரு சிறிய ஆர்வலர் கூட்டத்துக்கு அழிந்த, அழியப்போகிறவர்களின் கலைகளில் விசித்திரமான ஒரு மதிப்பு வந்துவிட்டது. ‘உயிரோடிருக்கும் செல்வந்தக் கூட்டம்’ என்று நான் சொல்லி இருக்க வேண்டும், ஆனால் அவை இரண்டும் ஒன்றல்லவா? நான் உயிரோடிருக்கிறேன்; நான் உள்மூச்சு வாங்கும்போது செல்வங்கள் கரைதிரண்டோடித் திணறவைக்கின்றன. எனது தொண்டையின் அடியில் அரிக்கவைக்கின்றன.
அரண்மதில் சுற்றியுள்ள நியூயோர்க்கில் இருக்கும் பெரிய புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் (அவை ஒவ்வொன்றாகக் குறைந்துகொண்டு வருவதை நாங்கள் கணக்கிடுவது உண்டு; அந்தப் பகடைக்காய் கடைசியில் எப்