பாலைவனத்தில் மலர்ந்த பூக்கள்
குறிஞ்சி மலர்வதைப்போல தமிழில் அரிதாகவே அழகியல்ரீதியாக அணுகக்கூடிய திரைப்படங்கள் தோன்றுகின்றன. 1953இல் ஃபிரஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோவின் பிரபல நாவல், தமிழில் ‘ஏழைபடும் பாடு’ என்ற தலைப்பில் மறக்கப்பட்ட மேதை கே. ராம்நாத்தின் இயக்கத்தில் வந்தது. அடுத்து ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ (1964) நம் கவனத்தை ஈர்த்தது. இந்த வரிசையில் பாபு நந்தன்கோடு இயக்கிய ‘தாகம்’ (1971) படத்தையும் ருத்ரையா உருவாக்கிய ‘அவள் அப்படித்தான்’ (1978) பட த்தையும் சேர்த்துக்கொள்வேன்.
தமிழ் சினிமாவில் நவீன யதார்த்தபாணி (Neo realist) படங்கள் தோன்றுவதற்கு காலம் பிடித்தது. தமிழ்த்திரைக்கு யதார்த்த சினிமாவை அழுத்தமாக அறிமுகப்படுத்தியவர் ஜெயகாந்தன் . உன்னைப்போல் ஒ