36+
இது காலச்சுவடு பத்திரிகையின் 301ஆவது இதழ். 36ஆம் ஆண்டின் தொடக்கம்.
மாற்று இதழ் ஒன்று இத்தனை நீண்டகாலம் தொடர்ந்து வெளியாவது அரிது. அவ்வாறு தொடர்ந்து வரக் காரணங்கள் அந்த இதழின் பங்களிப்பும் அதற்கு வாசகர்களிடமிருந்து கிடைத்த ஏற்புமே ஆகும்.
36 ஆண்டுகளில் வெவ்வேறு பண்பாட்டுத் துறைகள் சார்ந்த பங்களிப்பைக் காலச்சுவடு மேற்கொண்டிருந்தது. சில துறைகளில் குறிப்பிடத்தகுந்த விவாதங்களையும் தொடங்கிவைத்தது. விழுமியங்களை மீள்பார்வையில் பரிசோதிக்க உந்தாற்றலாக இருந்திருக்கிறது.
காலச்சுவடு இதழின் பங்களிப்புகளை அந்தத் துறை சார்ந்தவர்கள் இங்கே மறுபார்வைக்கும் பரிசீலனைக்கும் உட்படுத்துகிறார்கள். இதழின் பன்முகச் செயல்பாடுகள் பற்றிய உரையாடல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அது வரும் இதழ்களிலும் தொடரும்.
- பொறுப்பாசிரியர்