உலகம் கேட்ட இசை
இசை வாழ்க்கையின் தொடக்க நாட்களைப் பற்றி நேர்முகமாகக் கேட்கப்பட்ட எல்லாத் தருணங்களிலும் பதிலாக, உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் இரண்டு சம்பவங்களை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார்.
“சங்கீதம் ததும்பிக்கொண்டிருக்கும் குடும்பப் பின்னணியில் பிறந்த எனக்கு இயல்பாகவே இசை வாய்த்தது. போதாக்குறைக்குத் தந்தையார் அல்லா ரக்கா புகழ்பெற்ற இசைக் கலைஞர். எனக்குள் இசை குடிபுக வேறு என்ன வேண்டும்? பிறந்து சில நாட்களில் பிஞ்சுக் குழந்தையின் காதில் நல்ல வார்த்தைகளை சொல்வது மரபு. என் அப்பா, என் காதில் உச்சரித்தது தபலாவின் போல்களைத்தான், தாளக் கட்டுகளைத்தான். கடவுளின் பெயரைச் சொல்லாமல் இவற்றைச் சொல்கிறீர்களே என்று கேட்டதும் அப்பா சொன்னார். ‘இதுதான் என் பிரார்த்தனை. இதுதான் என் கடவுள். சரஸ்வதியும் கணபதியும் என் தெய்வங்கள். இதைச் சொன்னவர் விசுவாசியான ஓர் இஸ்லாமியர் என்பதை நினைவுகொள்ள வேண்டும். இசைக்கு மதம் இல்ல