விஜயா வாசகர் வட்ட்தின் ‘அ. முத்துலிங்கம் விருது 2025’
மூன்றாவது ஆண்டாக கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் மொழிபெயர்ப்பாளருக்கான ‘அ. முத்துலிங்கம் விருது–2025’க்கான விருது
என். கல்யாண்ராமனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதுக்கான பட்டயமும் ரூ. ஒரு லட்சமும் ரொக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது. தமிழுக்கு அவர் தொடர்ந்து ஆற்றிவந்திருக்கும் மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது. 2025, பிப்ரவரி 9, ஞாயிறு மாலை கோவை பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் விழா நடைபெற உள்ளது. விருதுபெறும் என். கல்யாண்ராமனுக்குக் காலச்சுவடின் வாழ்த்துக்கள்.