மீட்டெடுக்கப்படும் வரலாறு
முதல்நிலைத் தரவுகளைக் கொண்டு, தக்க ஆய்வு முறையியலைப் பின்பற்றி எழுதப்படும் கல்விப் புலன் சார்ந்த படைப்புகள் எளிமையாகவும் சுவையாகவும் இருப்பதில்லை. எளிமையாகவும் சுவையாகவும் எழுதும் பலர் தரவுகள் குறித்தோ ஆய்வு முறையியல் குறித்தோ கவலை கொள்வதில்லை. இது கிட்டத்தட்ட உலகம் முழுவதும் நிலவும் வழக்கம். தமிழ்ச்சூழலில், குறிப்பாக வரலாற்றுத் துறையில் முதல் வகையினர் அதிகம் இல்லை. இரண்டாம் நிலையினரே எங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களே ஆய்வாளர்களாக வலம் வருகிறார்கள். அவர்கள் எழுதுவதே வரலாறாகவும் கருதப்படுகிறது.
ஒரு வரலாற்றாசிரியருக்கும் வரலாற்றைப் பொது வாசகர்களுக்காகச் சுவையாக எழுதும் எழுத்தாளருக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதையே இங்கே எடுத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. முதல் எழுத்தே உயர்ந்தது, இரண்டாவது தாழ்ந்தது என்னும் பொருளில் அல்ல; இரண்டும் அடிப்படையில் வெவ்வேறானவை என்னும் அடிப்படைப் புரிதலை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில் ஆ.இரா. வேங்கடாசலபதிக்க