பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
உருது: அனுஷ்
தமிழகத் தீவிரப் பதிப்புச் சூழலில் அரசியல், கருத்தியல் தளத்தில் கொள்கைப் பிடிப்புடன் வியாபாரத்தில் துடிப்பான பதிப்பாளராக நம்பிக்கையளித்துக் கொண்டிருப்பவர் ‘எதிர்’ பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் அனுஷ். பிறநாட்டு நூல்களை உரிய முறையில் அனுமதி பெற்றுத் தமிழுக்குக் கொண்டுவருவதில் அவர் காட்டும் ஆர்வம் தமிழ்ப் பதிப்புலகிற்கு வளம் சேர்த்திருக்கிறது.
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆகியோருக்கான காப்புரிமைகள், நூல் செம்மையாக்கம் குறித்துத் தொடர்ந்து பேசிவரும் அனுஷ் தமிழ்ச் மொழிச் சூழல் குறித்து நம்பிக்கையுடன் இயங்கிவரும் இளைஞர்களில் ஒருவர். எழுத்தாளர்களுக்கு உரிய காப்புரிமைத் தொகையை வழங்குவதிலும் பதிப்பகங்களின் பொதுப்பண்பை மீறி முறையாகச் செயற்பட்டுக்கொண்ட