புக்கர் பரிசு விருது: பால் லிஞ்ச்சின் தீர்க்கதரிசனம்
புக்கர் 2023 விருது பெறும் அயர்லாந்து எழுத்தாளர் பால் லிஞ்ச் (Paul Lynch)சின் ‘ தீர்க்க தரிசனம்’ (Prophet Song) ஒரு வகையில் ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984’ நாவலை நினைவுபடுத்துகிறது. ஆர்வெல்லின் நாவலைப் போலவே இதுவும் ஆணவத்தையும் அதிகார வரம்பு மீறலையும் மையப்படுத்துகிறது. ஆனால் ஆர்வெல் ‘ஓஷியானியா’ எனும் ஓர் அகண்ட நிலப்பரப்பைக் கதைக்களனாக தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். மாறாக பால் லிஞ்ச் தன்னுடைய சொந்த நாடான அயர்லாந்தைக் கதைக்களனாக்கிக்கொள்கிறார்.
அயர்லாந்து இலக்கியத்தில் புக்கர் பரிசு பெறும் ஐந்தாவது எழுத்தாளர் பால் லிஞ்ச். விருதுபெறும் நாவலும் அவருடைய ஐந்தாவது நாவல்தான்.
“மனத்தை உலுக்கி எடுக்கும் நாவல்”,“தற்கால சமூகம் அரசியல் சார்ந்த மனஉளைச்சல்களைப் பிரதிபலிக்கும் நாவல்” என்று இதனைப் புக்கர் நிறுவனம் குறிப்பிடுகிறது.
ஒரு குடும்பத்தின் கதை
அது ஓர் அமைதியான குடும்பம். குடும்பத்தலைவன் லறி ஸ்டாக், ஆசிரியராகப் பணியாற்று