காஸாவும் வார்சா நாஜி வதை முகாம் போராட்டமும்
ரஷ்ய- அமெரிக்க எழுத்தாளர் மாஷா கெஸ்ஸன் (Masha Gessen,) நியூ யோர்க்கர் வார இதழுக்காக டிசம்பர் 9,2023) , எழுதிய கட்டுரை யூத இனவழிப்பு, இனவழிப்பை நினைவு கூருவதின் அரசியல், காஸாவில் இன்று நடக்கின்ற இனவழிப்பு என்பவற்றை விரிவாக விமரிசிக்கும் கட்டுரை. அவருடைய கருத்துகள் Democracy Now போன்ற செல்வாக்கு மிக்க மாற்று ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.
மாஷா கெஸ்ஸனின் அரசியல் சிந்தனைகளுக்காக ஜேர்மனியில் இயங்கும் ஹைன்றிச் போல் நிறுவனம், தாங்கள் ஆண்டுதோறும் வழங்கும் ஹன்னா ஆரெண்ட் (Hanna Arendt) பரிசை வழங்குவதாக அறிவித்தார்கள். எனினும் ஹைன்றிச் போல் நிறுவனத்தின் பெரும் கொடையாளர்களில் பலர் மாஷா கெஸ்ஸனுக்கு இப்பரிசும் விருதும் வழங்கப்படுவதை எதிர்த்தனர். காரணம்: மாஷா பாலஸ்தீன மக்களுக்காகப் பேசுகிறார் என்பதே. விருதும் பரிசும் வழங்கும் நாள் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் 2023, டிசம்பர