கண்ணீரிலும் குருதியிலும் கரையும் வாழ்வு
இஸ்ரேலின் வீடமைப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹரே ஸாகவ் (Harey Zahav) இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. காஸாவில் கடலோரமாக வீடுகளைக் கட்டி இஸ்ரேலியருக்கு விற்கப் போவதாக அறிவிக்கிறது. ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன நிலங்களில் இஸ்ரேலியருக்கு வீடமைப்புத் திட்டங்கள் பலவற்றை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இஸ்ரேலிய அமைச்சர்களான ஓரிட் ஸ்ட்ரொக், பெஸாலே ஸ்மொட்ரிஜ் (Orit Strok and Bezal’el Smotrich) போன்ற பலர் இத்தகைய திட்டங்களை வழி மொழிகிறார்கள்.
‘நாங்கள் ஒடுக்கப்பட்டவர்களால் ஒடுக்கப்படுபவர்கள்; அகதிகளின் அகதிகள்’
எட்வேர்ட் சையத்
சில வாரங்களுக்கு முன் இஸ்ரேலின் அரசத்