காஸா கவிதைகள்

காஸா
என் கண்ணீருக்கு அப்பால்,
வெகு தொலைவில்
உயர்ந்த மாடிக் குடியிருப்புகள் மீது
எறிகணை எறியும் ஒரு எந்திரப் பறவையைப் பார்த்தேன்.
கண்ணாடியும் நொறுங்கிய சிமெண்டுக் கட்டடங்களும்
மேலிருந்து உதிர்கின்றன.
கோதுமை ரொட்டிகள் பாழாகின்றன
அப்போது எனக்கு ஏழு வயது.
போரைவிடவும் பத்தாண்டுகள் இளையவன் நான்.
வீழும் குண்டுகளைவிட
ஒரு சில ஆண்டுகள்தான் மூத்தவன்.
காஸாவில்
காஸாவில்
மூன்று கால்களால் நடக்கிறோம்
வலக் கால்
இடக் கால்
அச்சக் கால்.
<span style="background-c
