ஆஸ்திரேலிய கிரிக்கெட்: மரபணுவில் ஊறிய வெற்றி மந்திரம்
‘உலகக் கோப்பையை எப்படி வெல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலியாவுக்குத் தெரியும்.’ ஆறாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவுக்கு அதன் பரம வைரிகளில் ஒருவரான ஸ்டூவர்ட் பிராடின் வாழ்த்துச் செய்தி இது. உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஆதிக்கம் குறித்து ஐசிசி இணையதளத்திற்குப் பேட்டி அளித்த ஸ்டீவ் ஸ்மித், “இது எங்கள் டிஎன்ஏவில் உள்ளது” என்கிறார். “தலைமேல் தூக்கிச் சுமக்க வேண்டிய உலகக் கோப்பையின் மீது கால்களை வைத்தது நியாயமா?” என்று மிட்செல் மார்ஷை நோக்கி வெற்றிக் கோப்பையைத் தெய்வமாக வணங்கும் ஒரு கண்டத்தின் பிரதிநிதியாக முகமது ஷமி கேட்கிறார். புனிதங்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் பாரம்பரியத்திலிருந்து வந்த மிட்செல் மார்ஷ், தலைக்கும் காலுக்கும் என்ன வித்தியாசம் என்று புரிந்துகொள்ள முடியாமல் தன்மீதான விமர்சனத்தை ஆச்சரியத்துடன் கடந்து செல்கிறார். வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணியும் ஆஸ்திரேலியா ஏன் சில மரபுகளை விடாப்பிடியாகக் கட்டிக்காக்கிறது? உண்மையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்